புதன், 21 டிசம்பர், 2011

பிளாக்கர் பிளாக்கில் METATAG இணைப்பது எப்படி?

நமக்கு அதிக வாசகர்கள் விளம்பரம் மற்றும் திரட்டிகள் வழியாக வரலாம்.  ஆனால் விளம்பரங்கள் மற்றும் திரட்டிகளினால் வரும் வாசகர்களால் நமது வலைபதிவு/வலைதளத்தின்  Rank உயராது.  Search Engine வழியாக அதிக வாசகர்கள் வந்தால்தான் நமது வலைபதிவு/வலைதளத்தின் Rank உயரும்.  Search Engine 'களில் இணைத்து அதிக
வாசகர்களை பெற நமது வலைபதிவு அல்லது வலைதளத்தில் Metatag இணைக்க வேண்டும்.  இதை எப்படி இணைப்பது என பார்க்கலாம்.

முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

 பிறகு Dashboard ==>  Design ==>  Edit HTML செல்லுங்கள்.

 பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.

<head>

கண்டுபிடித்த கோடிங்கின் கீழே.  இங்கே கீழே கொடுத்துள்ள கோடிங்கை Copy and Paste செய்யுங்கள். 

<b:include data='blog' name='all-head-content'/>

<b:if cond='data:blog.pageName == &quot;&quot;'>
<title><data:blog.title/></title>
<b:else/>
<title><data:blog.pageName/> | <data:blog.title/></title>
</b:if>

<meta content='YOUR KEYWORDS HERE' name='keywords'/>

<meta content='YOUR DESCRIPTION HERE' name='description'/>

<meta content='http://YORU BLOG/SITE ADDRESS/feeds/posts/default?orderby=updated' name='sitemap'/>

மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ளதுதான் நமது TITLE TAG இது மிக அதிக வாசகர்கள் வருவதற்கு வசதியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மேலே நீல வண்ணத்தில் உள்ள YOUR KEYWORDS HERE என்ற இடத்தில் உங்கள் வலைதளத்திற்கு சம்பந்தமான சில சொற்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

YOUR KEYWORDS HERE என்பதை இவ்வாறு இணைத்து விடுங்கள்.  (example)

<meta content='கம்ப்யூட்டர், பிளாக்கர், tips, Computer, Share, blogger, widget' name='keywords'/>

YOUR DESCRIPTION HERE என்பதை இவ்வாறு இணைத்து விடுங்கள்.  (example)

<meta content='கம்ப்யூட்டர், பிளாக்கர் மற்றும் மொபைல் டிப்ஸ் பதிவிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.' name='description'/>

 YORU BLOG/SITE ADDRESS என்பதை இவ்வாறு இணைத்து விடுங்கள்.  (example)

<meta content='http://tamil-computer.blogspot.com/feeds/posts/default?orderby=updated' name='sitemap'/>

பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.

Metatag சரியாக இணைத்தீர்களா?

நன்றி.

வெள்ளி, 9 டிசம்பர், 2011

நம் வலைப்பதிவை வேறொரு வலைபதிவிற்கு திருப்பிவிடுவது எப்படி?

நாம் உருவாக்கிய வலைப்பூவை ஒவ்வொரு இடுகையாக பொறுமையாக புரியும்படியாக எழுதி பிரபலமாக்குவதற்கு பட்ட கஷ்டம் நமக்குதான் தெரியும்.  அதில் ஏதாவது பிரச்சனை ஏற்ப்பட்டால் நாம் இத்தனை காலம் சேர்த்த நண்பர்கள் மற்றும் வாசகர்களையும் இழக்கநேரிடும்.  நமது நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு நமது பழைய
வலைப்பதிவின் Address 'தான் தெரியும்.  நாம் புதிய வலைப்பதிவு ஒன்று உருவாக்கி அதை பிரபலமாக்குவதர்க்குள் போதும் போதும் என ஆகிவிடும்.  அதனால் நமது பழைய வலைப்பதிவை புதிய வலைபதிவிற்கு திருப்பிவிடுவது எப்படி என்பதை பார்க்கலாம்.
இதனால் நமது பழைய வலைப்பதிவின் வாசகர்களை இழக்காமல் இருக்கலாம்.

கீழே கொடுத்துள்ள வழிமுறைகளை உங்கள் பழைய வலைபதிவில் மேற்கொள்ளுங்கள்.

முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு  Dashboard ==>  Design ==>  Edit HTML ==> Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
 
பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.


</head>


கண்டுபிடித்த கோடிங்கின் மேலே.  இங்கே கீழே கொடுத்துள்ள கோடிங்கை பேஸ்ட் செய்யுங்கள். 

<meta http-equiv="refresh" content="0;url=http://YOUR NEW BLOG/SITE URL HERE"/>


மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ள YOUR NEW BLOG/SITE URL HERE என்பதை நீக்கிவிட்டு உங்கள் புதிய வலைப்பதிவின்/வலைதளத்தின் முகவரியை சேருங்கள்.

பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் பழைய வலைபதிவு புதிய வலைபதிவிற்கு Redirect செய்யப்படும்.

நன்றி.
 

சனி, 3 டிசம்பர், 2011

வலைப்பதிவில் எத்தனை கருத்துரைகள் மற்றும் பதிவுகள் உள்ளன.

நம் வலைப்பதிவில் எத்தனை கருத்துரைகள் மற்றும் பதிவுகள் உள்ளன.   என்று கேட்டால் உடனே பிளாக்கரில் நுழைய தேவையில்லை நம் வலைபதிவிலே அதற்க்கான Widget நிறுவிக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் நமது  வலைபதிவில் எத்தனை பதிவுகள் மற்றும் கருத்துரைகள் உள்ளது என்பதை பார்த்துக் கொள்ளலாம்.  அந்த Widget கோடிங்கை கீழே கொடுத்துள்ளேன் இணைத்துப் பயன்பெறுங்கள்.



முதலில் Dashboard ==>  Design ==>  Add a Gadget ==>  HTML/JavaScript சென்று கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்துக் கொள்ளுங்கள்.


<center><script style="text/javascript">
    function numberOfPosts(json) {
    document.write('Total Posts: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');
    }
    function numberOfComments(json) {
    document.write('Total Comments: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');
    }
    </script>
    <font color="blue"><script src="http://tamil-computer.blogspot.com/feeds/posts/default?alt=json-in-script&callback=numberOfPosts"></script>
    <script src="http://tamil-computer.blogspot.com/feeds/comments/default?alt=json-in-script&callback=numberOfComments"></script></font></center>

 மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ள வலைப்பதிவின் URL 'ஐ நீக்கிவிட்டு உங்கள் வலைப்பதிவின் URL 'ஐ சேர்த்துக் கொள்ளுங்கள்.
 
பிறகு உங்கள் Widget 'ஐ செமித்துங்கள்.

நன்றி.

வியாழன், 1 டிசம்பர், 2011

பிளாக்கர் பிளாக்கை முழுவதுமாக BackUp எடுப்பது எப்படி?

நாம் பிளாக் ஆரம்பித்து நடத்திவரும் போது நமது Gmail Account திருடப்பட்டால்?, அல்லது பிளாக்கரில் சிறிய பிரச்சனை ஏற்ப்பட்டுவிட்டது என Google கை விரித்துவிட்டால்?  இன்னும் பல காரணங்கள் உள்ளது.   நாம் இத்தனை காலம் கஷ்டப்பட்டு உருவாக்கிய பிளாக் ஒரு நொடியில் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.  அதற்காகதான் பிளாகர்
சில காலம் முன்பு பிளாக்கர் Backup வசதியை அறிமுகப்படுத்தியது இது எல்லோருக்கும் தெரியும்.  ஆனால் நமது வலைபதிவில் உள்ள Posts, Template, Widgets என எல்லாவற்றையும் எப்படி BackUp எடுப்பது என்பதை பார்க்கலாம்.
Template Backup எடுப்பது எப்படி?
       Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதின் Template 'ஐ Backup எடுத்து கொள்ளலாம்.

இதில் Widgets 'களும் சேர்த்து Backup  எடுக்கப்படும் என நமக்கு தெரியும்.  ஆனால் சில சமயங்களில் Widgets 'களில் Error செய்தி காட்டும் அதனால் இதை தனியாக Backup எடுத்துக் கொள்ளுங்கள்.


Posts Backup எடுப்பது எப்படி?
       Dashboard ==> Settings ==> Export Blog ==> Download Blog என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதின் Post 'களை Backup எடுத்துக் கொள்ளுங்கள்.

இதில் நீங்கள் சிரமப்பட்டு எழுதிய இடுக்கைகள் மற்றும் பல வாசகர்களின் கருத்துரைகள் Backup எடுக்கப்படுகிறது.


Widgets Backup எடுப்பது எப்படி?
        Dashboard ==>  Design சென்று ஒவ்வொரு Widget 'ஐ யும் தனித் தனியாக Edit செய்து வரும் கோடிங்கை Notepad, அல்லது Wordpad 'ல் சேமித்துக் கொள்ளுங்கள்.

தமிழ் வார்த்தைகள் இருந்தால் Wordpad 'ல் சேமித்துக் கொள்ளுங்கள்.  பிளாக்கரில் Defult ஆக வரும் Widgets 'களை Backup எடுக்க தேவையில்லை.

நன்றி.

தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...